தேர்தல் பிரசாரங்களில் ராகுல் காந்தி மக்களிடம் பொய் சொல்கிறார்: ஜாவடேகர் 

தேர்தல் பிரசாரங்களில் ராகுல் காந்தி மக்களிடம் பொய் சொல்கிறார்: ஜாவடேகர் 

தேர்தல் பிரசாரங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களிடம் பொய் சொல்லி வருகிறார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். 

தேர்தல் பிரசாரங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களிடம் பொய் சொல்லி வருகிறார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி மற்றும் மற்ற கட்சித் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

அப்போது பேசிய பிரகாஷ் ஜாவடேகர், 

"ராகுல் காந்தி புதிய மந்திரத்தை படித்துள்ளார். பொய்யை உரக்கச் சொன்னால் அது உண்மை போல் தோன்றும் என்று ராகுல் காந்திக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு சரியாக கற்பிக்கப்படவில்லை. பொய் எப்போதும் பொய் தான். அது ஒருபோதும் உண்மையாக மாறாது. 

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும். பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் மக்களவையில் பாஜகவின் எண்ணிக்கை (மக்களவை உறுப்பினர்கள்) அதிகரிக்கும். வசுந்தரா ராஜே மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராவார். சிறந்த ஆட்சிக்கு முக்கியமந்திரி ஜல் ஸ்வலம்பன் அபியன் மற்றும் பாமாஷா போன்ற திட்டங்கள் நல்ல உதாரணம். இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி நாட்டில் உள்ள பெண்களுக்கு பிரதமர் உதவி செய்துள்ளார்" என்றார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதில், ராஜஸ்தானில் கடந்த 3 தினங்களாக பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பாஜக மீது தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இதனை தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com