மீ டூ விவகாரம்: மூத்த நீதிபதி, சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு மூலம் விசாரிக்க மத்திய அரசு முடிவு

மீ டூ மூவ்மெண்ட் மூலம் வெளிவரும் அனைத்து விவகாரங்களையும் மூத்த நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு மூலம் விசாரிக்க மத்திய அரசு இன்று (வெள்ளிக்கிழமை) முடிவு செய்துள்ளது. 
மீ டூ விவகாரம்: மூத்த நீதிபதி, சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு மூலம் விசாரிக்க மத்திய அரசு முடிவு

மீ டூ மூவ்மெண்ட் மூலம் வெளிவரும் அனைத்து விவகாரங்களையும் மூத்த நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு மூலம் விசாரிக்க மத்திய அரசு இன்று (வெள்ளிக்கிழமை) முடிவு செய்துள்ளது. 

மீ டூ ஹேஷ்டேக் மூவ்மெண்ட் கடந்த ஒரு வாரமாக மிகப் பெரிய அளவில் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. பெண்கள் பாலியல் ரீதியாக தாங்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை மீ டூ ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். 

இந்த மூவ்மெண்ட் மூலம், பாலியல் சீண்டல் பட்டியலில் பல பிரபலங்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன. 

கவிஞர் வைரமுத்து, தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் உட்பட பல பேர் மீது பாடகி சின்மயி மீ டூ ஹேஷ்டேக் மூலம் பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இது திரைத்துறை மட்டுமில்லாது விளையாட்டு, ஊடகம் என பல துறைகளில் உள்ள பிரபலங்களின் பெயர்கள் வெளிவந்தன. இதில் பல பெண்கள் தங்களது பெயரை வெளியிடாமல் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் பிரச்னைகளை மட்டும் வெளியிட்டு வருகின்றனர்.  

இதைத்தொடர்ந்து, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அது குறித்து புகார் அளிக்க வயது வரம்பு எதுவும் இருக்கக்கூடாது என சட்ட அமைச்சகத்திடம் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தினார்.

இந்நிலையில், மீ டூ மூவ்மெண்ட் மூலம் வெளிவரும் விவகாரங்களை மூத்த நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு மூலம் விசாரிக்க குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com