திருவிதாங்கூர் தேவஸ்வம் விவகாரம்; கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவஸ்வம் வாரியத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கக் கோரி பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,
திருவிதாங்கூர் தேவஸ்வம் விவகாரம்; கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவஸ்வம் வாரியத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கக் கோரி பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 ஆறு வாரங்களுக்குள் அதற்கான விளக்கங்களை மாநில அரசும், சம்பந்தப்பட்ட தேவஸ்வம் வாரியங்களும் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருவிதாங்கூர் மற்றும் கொச்சின் தேவஸ்வம் வாரியங்களுக்கு உறுப்பினர்களை தன்னிச்சையாக நியமிப்பதற்கும், அதற்கான தேர்தல்களை நடத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசுக்கு அத்தகைய அதிகாரங்களை அளிக்க வகை செய்யும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
 அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்தச் சட்டங்களை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இந்நிலையில், கேரள தேவஸ்வம் வாரியங்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதிகள் யு.யு. லலித், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
 அதனை பரிசீலித்த நீதிபதிகள், இதுதொடர்பாக கேரள மாநில அரசும், சம்பந்தப்பட்ட தேவஸ்வம் வாரியங்களும் ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com