மீ டூ குற்றச்சாட்டு: நாடு திரும்பிய மத்திய அமைச்சர் எம்ஜே அக்பர் ராஜிநாமா?

மீ டூ குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மத்திய அமைச்சர் எம்ஜே அக்பர் ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
மீ டூ குற்றச்சாட்டு: நாடு திரும்பிய மத்திய அமைச்சர் எம்ஜே அக்பர் ராஜிநாமா?

மீ டூ குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மத்திய அமைச்சர் எம்ஜே அக்பர் ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெளியுறவுத் துறை விவகாரங்களுக்கான இணையமைச்சர் எம்.ஜே. அக்பர், இதற்கு முன்னர் பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஊடகத் துறையில் அவர் தீவிரமாக இயங்கியபோது பெண் பத்திரிகையாளர்கள் பலருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எம்.ஜே. அக்பர் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

'மீ டூ' என்ற தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சுட்டுரை வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் நடிகைகள் தனு ஸ்ரீ தத்தா, கங்கனா ராவத், பாடகி சின்மயி ஆகியோர் திரைத் துறையில் தாங்கள் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை அதில் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த வரிசையில், பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது அத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். அக்பரின் தலைமையில் பணியாற்றியபோது அவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இது கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.

இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து எம்.ஜே.அக்பர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
 
இதற்கிடையில், அவர் அரசு முறை பயணமாக நைஜீரியாவுக்கு சென்றிருந்தார். அவர், இந்தியாவுக்கு திரும்பியவுடன் தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகிவந்தன. 

இதையடுத்து, அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவுக்கு திரும்பினார். அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, 'இதுதொடர்பாக அறிக்கை வெளியிடப்படும்' என்றார். 

இந்நிலையில், இந்தியாவுக்கு திரும்பிய அவர் மின்னஞ்சல் மூலம் தனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com