முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாடு கொண்டது பாஜக: மாயாவதி விமர்சனம்

பாஜவுகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் முதலாளித்துவத்துக்கு அதிதீவிரமாக ஆதரவளித்து வருகின்றன என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாடு கொண்டது பாஜக: மாயாவதி விமர்சனம்

பாஜவுகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் முதலாளித்துவத்துக்கு அதிதீவிரமாக ஆதரவளித்து வருகின்றன என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
 சத்தீஸ்கரில் அடுத்த சில வாரங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநில அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் முக்கிய கட்சியாக விளங்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சத்தீஸ்கரில் அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸýடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது.
 அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அஜித் ஜோகி முன்னிறுத்தப்பட்டுள்ளார். அவரது கட்சி 55 இடங்களிலும் , பகுஜன் சமாஜ் 35 இடங்களிலும் போட்டியிட உள்ளன. இந்நிலையில் சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மாயாவதி பங்கேற்ற பிரசார பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், அவர் பேசியதாவது:
 ஆர்எஸ்எஸ் பின்னணியுடன் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து நாட்டில் விரும்பத்தகாத பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பசு பாதுகாவல் என்ற பெயரில் அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர். தலித்துகள், ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள்தான் இத்தகையை கொடுஞ்செயல்களால் பாதிக்கப்படுகின்றனர்.
 கடந்த 2014-இல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகுதான் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரத்தில் பாஜக அரசு காட்டி வரும் அலட்சியப் போக்கும், மெத்தனமும்தான் இதற்கு மூல காரணம்.
 மக்களவைத் தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், அவற்றில் ஒன்று கூட நிறைவேற்றப்பட்டதாக இதுவரை செய்திகள் வெளியாகவில்லை. மாறாக, ரஃபேல் போர் விமான ஒப்பந்த நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்த செய்திகள்தான் அனுதினமும் வந்த வண்ணம் உள்ளன.
 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போஃபர்ஸ் ஊழல் நடந்தது போல தற்போது பாஜக ஆட்சியில் ரஃபேல் ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆனால், அதுகுறித்து பதிலளிக்க வேண்டிய பிரதமரோ இன்று வரை மெüனம் சாதித்து வருகிறார். முதலாளித்துவக் கொள்கைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொண்டுள்ளன என்றார் மாயாவதி.
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com