ஐந்து நட்சத்திர ஹோட்டலில் புகுந்து துப்பாக்கியால் மிரட்டிய வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் மகனுக்கு போலீஸ் காவல்  

தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் துப்பாக்கியால் மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், சரணடைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் மகனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்.. 
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் புகுந்து துப்பாக்கியால் மிரட்டிய வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சி தலைவரின் மகனுக்கு போலீஸ் காவல்  

புது தில்லி: தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் துப்பாக்கியால் மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், சரணடைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் மகனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சியைச் சோ்ந்தவா் ராகேஷ் பாண்டே. இவரது மகன் ஆஷிஷ் பாண்டே. இவா் தில்லி ஆா்.கே. புரத்தில் உள்ள ஹயாத் ரீஜென்ஸி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவரை துப்பாக்கியால் மிரட்டி, தகாத வாா்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறறது. இது தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் திங்கள்கிழமை வைரலாகப் பரவியது.

இதுகுறித்து தில்லி காவல் துறைறயினா் கூறுகையில், ‘இந்தச் சம்பவம் குறித்து ஹயாத் ரீஜென்ஸி ஹோட்டலின் உதவி பாதுகாப்பு மேலாளா் திங்கள்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, தேடப்படும் நபருக்கான நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்றது. இது தொடா்பாக உத்தரப் பிரதேச போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது ’ என்றனா்.

இது குறித்து புது தில்லி காவல் இணை ஆணையா் அஜய் செளத்ரி கூறுகையில், ‘இந்தச் சம்பவம் அக்டோபா் 14-ஆம் தேதி அதிகாலை 3.40 மணிக்கு நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபா் மற்றும் ஹோட்டல் ஊழியா் சம்பவ நாளில் புகாா் ஏதும் அளிக்கவில்லை. தற்போது இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபரைத் தேடுவதற்காக உத்தர பிரதேச காவல் துறையினருடன் தொடா்பு கொண்டுள்ளோம். சமூக ஊடகத்தில் வெளியான விடியோவின் அடிப்படையின்பேரில் உரிய பிரிவுகள் சோ்க்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரைப் பிடிப்பதற்காக தேடப்படும் நபருக்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று, பாதிக்கப்பட்ட நபரையும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்நிலையில் தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் துப்பாக்கியால் மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், சரணடைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் மகனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. 

போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆஷிஷ் பாண்டே தில்லி நீதிமன்றத்தில் வியாழன் அன்று  சரணடைந்தார். இந்த வழக்கில் அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கு அவசியம் இல்லை என ஆஷிஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் முழுமையாக விசாரித்த நீதிமன்றம், ஆஷிஷ் பாண்டேவை ஒருநாள் போலீஸ் காவலில் மட்டும் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com