கேராளாவில் சபரிமலை போராட்டக்காரர்கள் 200 பேர் கைது: பாஜக  போராட்ட அறிவிப்பு 

கேராளாவில் சபரிமலை போராட்டக்காரர்கள் 200 பேரை காவல்துறை கைது செய்துள்ளதைக் கண்டித்து பாஜக., போராட்டம் நடத்தப் போவதுள்ளதாக அறிவித்துள்ளது
கேராளாவில் சபரிமலை போராட்டக்காரர்கள் 200 பேர் கைது: பாஜக  போராட்ட அறிவிப்பு 

திருவனந்தபுரம்: கேராளாவில் சபரிமலை போராட்டக்காரர்கள் 200 பேரை காவல்துறை கைது செய்துள்ளதைக் கண்டித்து பாஜக., போராட்டம் நடத்தப் போவதுள்ளதாக அறிவித்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், பல்வேறு ஹிந்து அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், ஐயப்பன் கோயிலின் நடை கடந்த வாரம் புதன்கிழமை திறக்கப்பட்டது. கோயிலில் 50 வயதுக்கு உள்பட்ட பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி வந்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என சில பெண்களை, பக்தர்கள் பாதி வழியில் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களை போலீஸார் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவமும், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவங்களும் நடந்தது. 

அதன் தொடர்ச்சியாக கேரள மாநில காவல்துறை சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 2000 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மேலும் 210 பேர் மீது 'லுக் அவுட்' அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 200 பேரை காவல்துறை வியாழனன்று கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் எர்ணாகுளத்தில் 71 பேரும், கோழிக்கோட்டில் 40 பேரும் மற்றும் பாலக்காடு  - பத்தனம்திட்டா மாவட்டங்களில் தலா 30 பேரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கேராளாவில் சபரிமலை போராட்டக்காரர்கள் 200 பேரை காவல்துறை கைது செய்துள்ளதைக் கண்டித்து பாஜக., போராட்டம் நடத்தப் போவதுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:

இறை நம்பிக்கையாளர்களைக் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். உலகத்தின் இரண்டாவது பெரிய வழிப்பாட்டுத் தலமாக அமைந்துள்ள சபரிமலையை சீரழிக்கும் முயற்சி இது. இதைக் கண்டித்து நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்வோம். 

காவல்துறையின் இந்த செயலைக் கண்டித்து வெள்ளியன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம். அத்துடன் இந்த போராட்டத்தை கர்நாடகா,தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்ல உள்ளோம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

அதேசமயம் சபரிமலை குறித்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக மாநிலம் தழுவிய கூட்டங்கள் நடத்த உள்ளதாக ஆளும் கூட்டணியும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com