இந்தியாவும் - ஜப்பானும் ஒரு சிறந்த வெற்றிக்கூட்டணி:  பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வருடாந்திர மாநாட்டில் கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜப்பான் புறப்பட்டு 
இந்தியாவும் - ஜப்பானும் ஒரு சிறந்த வெற்றிக்கூட்டணி:  பிரதமர் நரேந்திர மோடி


புதுதில்லி: 2 நாள் பயணமாக ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ள பிரமதர் மோடி, இந்தியாவும், ஜப்பானும் ஒரு சிறந்த வெற்றிக்கூட்டணி நாடுகள் என தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வருடாந்திர மாநாடு நாளை டோக்கியோவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தில்லி விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் இன்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசுகிறார்.  

ஜப்பான் புறப்படும் முன்பு பிரதமர் மோடி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவும், ஜப்பானும் ஒரு சிறந்த வெற்றிக்கூட்டணி நாடுகள். ஜப்பான் இந்தியாவின் உண்மையான நட்புநாடு. அது பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப நவீனமயமாக்குதலில் இந்தியாவின் நம்பகமான நாடாகவும், முக்கிய பங்காளராக ஜப்பான் விளங்குகிறது. நம்முடைய நாட்டின் எதிர்காலத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் ஜப்பானிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்தியா - ஜப்பான் இடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவு முன்பு இருந்ததை விட முற்றிலும் புதிய மாற்றத்தை சந்தித்துள்ளது. 

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இரு நாடுகளும் பல்வேறு உயர்ந்த மதிப்பு மிக்க விஷயங்களை பகிர்ந்து கொண்டு, இருதரப்பும் அமைதி,வளர்சிக்காவும் உழைக்கின்றன

மேக் இன் இந்தியா, திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களில் ஜப்பான் தனது பங்களிப்பை அளித்து வருவதாகவும் கூறினார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்தித்தேன், அதன்பின் இப்போது 12-வது முறையாக அவரைச் சந்திக்கச் செல்கிறேன். 

இந்த மாநாட்டின்போது, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பல்வேறு தொழிலதிபர்களுடனும், பல்வேறு நாடுகளின் நிறுவனத் தலைவர்களுடன் கலந்து பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கும். ஜப்பானில் வாழும் இந்திய மக்கள் முன் நான் உரையாற்ற இருக்கிறேன். 

இந்தச் சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு வலுப்பெறும், முதலீடு பெருக்கம் ஏற்படும், சுகாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்பம், வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் துறை, பேரிடர் மேலாண்மை, கட்டமைப்புதுறை ஆகியவற்றில் கூட்டாக இணைந்து செயல்பட வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com