இந்திய ஒற்றுமைக்கான அடையாளமாக சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை என்றென்றும் திகழும்: பிரதமர் மோடி

இந்திய ஒற்றுமைக்கான அடையாளமாக சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை என்றென்றும் திகழும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமைக்கான அடையாளமாக சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை என்றென்றும் திகழும்: பிரதமர் மோடி

இந்திய ஒற்றுமைக்கான அடையாளமாக சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை என்றென்றும் திகழும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், நர்மதா அருகே கெவாடியா கிராமத்தில் சர்தார் சரோவர் அணை பகுதியில் கட்டப்பட்ட சிலைலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். வல்லபாய் படேலின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். சிலை திறப்பு நிகழ்ச்சியில் தமிழகம் சார்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றுள்ளனர். 

550 மன்னராட்சி சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியவர் வல்லபாய் படேல். ஒற்றுமைக்கான சிலையாக கருதப்படும் வல்லபாய் படேல் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது.  சீனாவில் உள்ள ஸ்பிரிங் டெம்பிள் புத்தர் சிலை 153 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த சிலையே உலகில் மிக உயரமான சிலையாக இதுவரை கருதப்பட்டு வந்தது. தற்போது உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமை, சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு கிடைக்கவுள்ளது. 

சிலை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அற்றிய உரையில், வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைத்ததில் பெருமிதம் அடைகிறேன்.  இரும்பு மனிதர் சர்தார் பட்டேலின் பிறந்தநாளை, ஒற்றுமை தினமாக தேசமே கொண்டாடுகிறது. பட்டேல் சிலையை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளலாம். பட்டேல் சிலை திறக்கப்பட்ட இந்நாள் இந்திய வரலாற்றில் இடம்பிடிக்கும். 

இந்திய ஒற்றுமைக்கான அடையாளமாக சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை என்றென்றும் திகழும். குஜராத் முதல்வராக இருந்தபோது அறிவித்த சிலையை பிரதமராக திறந்துவைத்ததில் பெருமை. இந்தியா இன்றளவும் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் சர்தார் வல்லபாய் பட்டேல். சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் ஒற்றுமை ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com