சுடச்சுட

    

    'சிவன்தான் உலகம்': ராகுல் காந்தி வெளியிட்ட 'கைலாச விடியோ' 

    By UNI  |   Published on : 07th September 2018 02:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Rahul Gandhi 2

     

    புது தில்லி: கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்தமாதம் 31-ஆம் தேதி முதல் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார். யாத்திரை துவங்கியதில் இருந்து கைலாஷ் மானசரோவர் தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய விடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 'சிவன்தான் உலகம்' என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த விடியோவானது சரியாக 18 நொடிகள் ஓடுகிறது.

    இதில் கைலாஷ் மானசரோவர் பகுதியில் உள்ள மலைச்சிகரங்களின் அழகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai