இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும்: எச்சரிக்கிறார் மெஹபூபா முப்தி 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்கு காரணமான சிறப்பு சட்டப்பிரிவு 35A நீக்கப்படுமானால், இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும் என்று மெஹபூபா முப்தி...
இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும்: எச்சரிக்கிறார் மெஹபூபா முப்தி 

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்கு காரணமான சிறப்பு சட்டப்பிரிவு 35A நீக்கப்படுமானால், இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும் என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான மெஹபூபா முப்தி எச்சரித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிதலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, பாஜக வாபஸ் வாங்கியதைத் தொடந்து அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. 

அத்துடன் அரசியல் சட்டப் பிரிவு 370-ன் படி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு சட்டப்பிரிவு 35 A நீக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.  

தற்போது அக்டோபர் முதல் டிசம்பர் வரை  எட்டு கட்டங்களாக நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை சமீபத்தில் அறிவித்தது. 

ஆனால் சிறப்பு சட்டப்பிரிவு 35A விஷயத்தில் தெளிவான முடிவு அறிவிக்கப்படாதவரை, தேர்தல் நடைமுறைகளில் ஈடுபடப் போவதில்லை என்று கூறி தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல் புறக்கணிப்பு முடிவை முன்பே அறிவித்து விட்டது. 

இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதற்கு காரணமான சிறப்பு சட்டப்பிரிவு 35A நீக்கப்படுமானால், இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முறிந்து விடும் என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான மெஹபூபா முப்தி எச்சரித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் எந்த சூழ்நிலையிலும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தினைக் காக்கப் போராடுவோம். சிறப்பு சட்டப் பிரிவு என்பது எங்கள் மக்களுக்கும் சமூகத்திற்கும் வாழ்வா சாவா பிரச்சனை என்றால், ஜனநாயகம் என்பது வாழ்வாதாரம் ஆகும், இத்தகைய சூழலில் தேர்தல் நடத்தப்படுவது என்பது, குறிப்பிட்ட அமைப்புகளின் நமபிக்கைத்தன்மையை சிதைப்பதுடன் அவை உருவாக்கப்பட்ட நோக்கங்களையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. 

நாங்கள் ஆட்சியில் இருக்கும்போதே, எந்த காரணத்தின் பொருட்டும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துக்கான சிறப்பு சட்டப் பிரிவு 35A நீக்கப்பட்டால், ஆட்சியினை விட்டு வெளியேறி விடுவோம் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தோம். 

இந்தியாவுடனான எங்கள் உறவு என்பது அரசியல் சட்டப் பிரிவு 370-ன் வழியிலமைந்துள்ளது. குறிப்பிட்ட சட்டம் நீக்கப்படுமானால், இந்தியாவுடனான காஷ்மீரின் உறவு முடிவுக்கு வந்து  விடும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com