கன்னியாஸ்திரி குறித்து சர்ச்சை கருத்து: கேரள எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் அழைப்பாணை

பாதிரியார் மீது பாலியல் புகார் தெரிவித்த கன்னியாஸ்திரி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படும் கேரளத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று
கன்னியாஸ்திரி குறித்து சர்ச்சை கருத்து: கேரள எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் அழைப்பாணை

பாதிரியார் மீது பாலியல் புகார் தெரிவித்த கன்னியாஸ்திரி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படும் கேரளத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. கேரள மாநிலத்தின் பூஜார் தொகுதியின் சுயேச்சை எல்எல்ஏ பிசி ஜார்ஜ், பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் நடத்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார். மேலும், பாலியல் பலாத்காரம் புகார் குறித்து முன்னரே ஏன் அப்பெண் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிசி ஜார்ஜுக்கு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா அனுப்பியுள்ள கடிதத்தில், "இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையை ப் கருத்தில்கொண்டு, இதுபோன்ற பொறுப்பற்ற கருத்தைத் தெரிவித்தமைக்காக விளக்கம் அளிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி ஆணையம் முன்பாக நீங்கள் ஆஜராக வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 எம்எல்ஏ பிசி ஜார்ஜின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தார். அதில், "எம்எல்ஏ ஜார்ஜின் கருத்து மிகுந்த கண்டனத்திற்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் அவமானகரமானவை. ஜார்ஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள மாநிலத்தின் காவல் துறைத் தலைமை இயக்குநர் லோகநாத் பெஹெராவுக்கு கடிதம் எழுத உள்ளேன்' என்று கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com