இந்திய-அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு சரியான பாதையில் பயணிக்கிறது

இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்புரீதியிலான தொடர்புகள், சரியான பாதையில் பயணிக்கின்றன' என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்தார்.
இந்திய-அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு சரியான பாதையில் பயணிக்கிறது


இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்புரீதியிலான தொடர்புகள், சரியான பாதையில் பயணிக்கின்றன' என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற உயர்நிலை பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாகவும், அதுவொரு சாதனையான தருணம் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோருடன் தில்லியில் கடந்த 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். 2+2' என்ற பெயரில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையிலான தகவல்தொடர்பை வலுப்படுத்தவும், அமெரிக்க ராணுவ தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கவும் வகை செய்யும் முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், பரஸ்பர நலன்களின் அடிப்படையில் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில், செய்தியாளர்களிடம் ஜேம்ஸ் மேட்டிஸ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் நடைபெற்ற உயர்நிலை பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தன. பாதுகாப்புத் துறையில் நெருக்கமான உறவுகளை முன்னெடுப்பதில் இரு நாடுகளுக்கும் எந்த தயக்கமும் இல்லை. இந்தியப் பயணத்தை பொருத்தவரை, வரலாற்று ரீதியாகவும், சாதனையான தருணமாகவும் அமைந்தது. இருதரப்பு பாதுகாப்பு தொடர்புகள் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்றார் அவர்.
மேலும், இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே இணக்கத்தையும், தகவல்தொடர்பையும் வலுப்படுத்தும் வகையில் கையெழுத்தான ஒப்பந்தம், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பில் புதிய வழிகளை திறந்திருப்பதாகவும் மேட்டிஸ் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com