உ.பி.: ரசாயன ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள பெட்ரோலிய-ரசாயன ஆலையில் புதன்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள பெட்ரோலிய-ரசாயன ஆலையில் புதன்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் உமேஷ் குமார் சிங் கூறியதாவது:
நாகினா சாலையில் உள்ள மோஹித் பெட்ரோலிய-ரசாயன ஆலையில் காலை 8 மணியளவில் இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த ஆலையில் இருந்த கொதிகலன் ஒன்று பழுதாகி கடந்த சில நாள்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை காலை அந்த கொதிகலனை சரிசெய்யும் பணியின்போது, வெல்டிங் செய்த வேளையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இந்த விபத்தை அடுத்து ஒரு தொழிலாளி காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவர் குறித்து விசாரிப்பதுடன், ஆலையின் உரிமையாளரையும் தேடி வருகிறோம் என்று உமேஷ் குமார் சிங் கூறினார்.
முதல்வர் இரங்கல்: இதனிடையே, ரசாயன ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய அவர் உத்தரவிட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com