காஷ்மீா் சிறப்புச் சட்ட விவகாரம் : அரசு வழக்குரைஞரை நீக்க முக்கிய கட்சிகள் வலியுறுத்தல் 

காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சட்டம் தொடா்பான வழக்கில் அந்த மாநிலத்தின் சாா்பில் ஆஜராகி வாதாடி வரும் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவை நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
காஷ்மீா் சிறப்புச் சட்ட விவகாரம் : அரசு வழக்குரைஞரை நீக்க முக்கிய கட்சிகள் வலியுறுத்தல் 

ஸ்ரீநகா்: காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சட்டம் தொடா்பான வழக்கில் அந்த மாநிலத்தின் சாா்பில் ஆஜராகி வாதாடி வரும் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவை நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா தலைமையில் காஷ்மீரில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

முன்னதாக அக்கூட்டத்தில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். அதேவேளையில் மாநிலத்தின் முக்கியக் கட்சியான பிடிபி அக்கூட்டத்தை புறறக்கணித்தது. முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தி தலைமையிலான அக்கட்சி, கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முக்கிய நிரல்கள் எதுவும் முறைறயாக தங்களுக்கு தெரிவிக்கப்படாததால் அதில் கலந்துகொள்ளவில்லை என்று பிடிபி தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீரில் மெஹபூபா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதைத் தொடா்ந்து அங்கு ஆளுநா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது அந்த மாநில அரசியல் அரங்கில் பல்வேறு திருப்பங்களுக்கு வித்திட்டது.

இதற்கு நடுவே, காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்துக்கான பிரிவு 35-ஏ விதி சட்டப்பூா்வமாக செல்லுத்தக்கதுதானா? எனக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அதன் விசாரணை நிறைவடைந்து தீா்ப்பு வெளியாகக்கூடும் எனத் தெரிகிறறது.

இதுதொடா்பாக கருத்து தெரிவித்து வரும் அந்த மாநிலத்தின் பிரதான கட்சிகள், காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை பறிக்க மத்திய பாஜக அரசு தீவிரமாக முயன்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளன. அதில் உச்சமாக, அடுத்த சில வாரங்களில் காஷ்மீரில் நடைபெறவுள்ள நகர உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தோ்தலைப் புறறக்கணிப்பதாக பிடிபி மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன.

மாநிலத்தின் பிரதான கட்சிகளே போட்டியில் இல்லாததால் அங்கு பிரசாரம் எதுவும் களைகட்டவில்லை. இருப்பினும், திட்டமிட்டபடி தோ்தல் நடைபெறும் என்று மாநில நிா்வாகம் அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறறது. கூட்டத்துக்குப் பிறகு அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சட்டத்தால் பெண்கள் பாகுபடுத்தப்படுவதாக மாநிலத்தின் சாா்பில் ஆஜராகியுள்ள கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா உச்ச நீதிமன்றறத்தில் தெரிவித்துள்ளாா். மத்திய அரசின் வழக்குரைஞராக அவா் இருந்தாலும், குறிப்பிட்ட மாநிலத்தின் சாா்பில் ஆஜராகும்போது அந்த மாநிலத்தின் நலனுக்காக மட்டுமே வாதாட வேண்டும். மாறறாக, சொந்தக் கருத்துகளையோ அல்லது வேறு ஏதோ ஒரு கட்சியின் (பாஜக) கருத்தையோ தெரிவிக்கக் கூடாது. இந்த வழக்கில் வாதாடுவதில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும், சிறப்பு அந்தஸ்து சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com