சிபிஎஸ்சி தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட  கொடூரம் 

சிபிஎஸ்சி தேர்வில் ஹரியாணா மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட  கொடூரம் நிகழ்ந்துள்ளது. 
சிபிஎஸ்சி தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட  கொடூரம் 

ரேவாரி (ஹரியாணா): சிபிஎஸ்சி தேர்வில் ஹரியாணா மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட  கொடூரம் நிகழ்ந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக ரேவாரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

ஹரியாணாவின் ரேவாரி மாவட்டத்தின் கோஸ்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு நடந்த சிபிஎஸ்சி தேர்வில் ஹரியாணா மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். இதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் இவ்வருட குடியரசு தினத்தன்று நடந்த விழாவில் இவர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அந்த மாணவி அருகில் உள்ள மஹேந்திரகர் மாவட்டத்தில் உள்ள நர்நுல் பகுதியில் பயிற்சி மையம் ஒன்றில் பயின்று வருகிறார். 

இவர் புதன்கிழமை அன்று காலை பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது, அந்த ஊரைச் சேர்ந்த இருவர் பேருந்து நிலையத்தில் அவரைச்  சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் குடிப்பதற்குத் தந்த நீரை அருந்திய மாணவி சுயநினைவை இழந்துள்ளார். பின்னர் அவர்கள் அம்மாணவியை அருகில் உள்ள பண்ணை ஒன்றுக்கு அவர்களது காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது கொஞ்சம் நினைவடைந்த மாணவி காரிலிருந்த நிஷு என்ற வாலிபரை அடையாளம் கண்டுள்ளார். ஆனால் உடனே மீண்டும் அவர் மயக்கம் அடைய வைக்கப்பட்டுளளார்.   

அங்கு வைத்து அவரை  அந்த வாலிபர்கள் கூட்டு வன்புணர்வு செய்துளளனர். மேலும் சிலரும் அந்த இடத்தில் இருந்துள்ளதாகத் தெரிகிறது.  பின்னர் அப்பெண்ணை அவர்கள் அருகில் உள்ள கனினா என்னும் இடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் விட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் அந்த பெண்ணின் பெற்றோருக்கும் போன் செய்து தகவல் கூறியுள்ளனர். 

பின்னர் உடனடியாக அன்று இரவே பெண்ணின் பெற்றோரின் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கஜ், மணிஷ் மற்றும் நிஷு ஆகிய மூவரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுளள்னர். 

இவ்வாறு காவல்துறையின் முதல் தகவலறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும், விரைவில் அவர்கள் போலீஸ் பிடியில் வருவார்கள் என்றும் ஹரியாணா கூடுதல் காவல்துறை இயக்குநர் சாவ்லா தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுகையில், 'என் மகளுக்கு விரைவில் நீதி கிடைக்க உதவுங்கள்; குற்றவாளிகள் தைரியமாக வெளியில் நடமாடுகின்றனர். கிராம மக்களும் அவர்களுக்கு பயந்து வாய் திறப்பதில்லை. இதுகுறித்து யாரிடமாவது கூறினால் என் மகளைக் கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டுகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com