கேரளாவில் கனமழையும், பெரு வெள்ளத்தாலும் கூட சாதிக்க முடியாமல் போன ஒரு விஷயம்!

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையால ஏற்பட்ட வெள்ளம் அம்மாநிலத்தையே புரட்டிப்போட்டது. 1924ம் ஆண்டுக்குப் பிறகு அப்படி ஒரு மழை, வெள்ளத்தை அம்மாநிலம் கண்டுள்ளது.
கேரளாவில் கனமழையும், பெரு வெள்ளத்தாலும் கூட சாதிக்க முடியாமல் போன ஒரு விஷயம்!


கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையால ஏற்பட்ட வெள்ளம் அம்மாநிலத்தையே புரட்டிப்போட்டது. 1924ம் ஆண்டுக்குப் பிறகு அப்படி ஒரு மழை, வெள்ளத்தை அம்மாநிலம் கண்டுள்ளது.

வெள்ளத்தால் சுமார் 500 பேர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இன்னும் சில ஆயிரம் மக்கள் நிவாரண முகாம்களில்தான் தங்கியுள்ளனர்.

கேரளாவில் பெய்த கன மழை காரணமாக அம்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டும் அல்ல, மீண்டும் அவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், இது எதுவுமே கேரளாவில் மதுபான விற்பனையைப் பாதிக்கவில்லை என்பதே அதிர்ச்சி தரும் தகவலாக தற்போது நம்மை வந்தடைந்துள்ளது.

அதாவது, கேரள மாநில மதுபான கழகத்தின் கடந்த ஆகஸ்ட் மாத மது விற்பனை (அதாவது மழை கோரத்தாண்டவம் ஆடிய மாதம்) அதற்கு முந்தைய ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் குறையவில்லை என்றும் சற்று அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது மட்டுமல்லாமல், கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிட்டாலும் மது விற்பனை எந்த வகையிலும் குறையவில்லை என்றே புள்ளி விவரங்கள் சாட்சி சொல்கின்றன.

கன மழை, வெள்ளம் சூழ்ந்த நிலையிலும் மதுபான விற்பனை அதிகரித்தது எப்படி என்று முக்கிய அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். அதில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு மதுபான விற்பனை அதிகமாக இருந்ததாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

உண்மையிலேயே வெள்ளம் பாதித்திருந்த ஆகஸ்ட் 15 முதல் 19ம் தேதி வரை மதுபான விற்பனை மிகவும் குறைவாகவே இருந்ததாகவும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொதுவாக மதுபான விற்பனை அதிகமாக இருக்கும், ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு உயரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com