தேர்தலில் பணபலத்தை தடுக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும் - தலைமைத் தேர்தல் ஆணையர்

தேர்தல் நேரங்களில் பணபலத்தை தடுக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓபி ராவத் சனிக்கிழமை தெரிவித்தார். 
தேர்தலில் பணபலத்தை தடுக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும் - தலைமைத் தேர்தல் ஆணையர்

தேர்தல் நேரங்களில் பணபலத்தை தடுக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓபி ராவத் சனிக்கிழமை தெரிவித்தார். 

இந்திய தேர்தல் ஜனநாயகம் சந்திக்கும் சவால்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஓபி ராவத் தில்லியில் சனிக்கிழமை பேசியதாவது, "புதிய மாற்றங்களைக் கொண்டு ஜனநாயகம் செயல்படவில்லை. அதற்கு நேர்மை, துணிச்சல், அறிவு போன்ற பண்புகள் தான் அவசியம். ஆனால், இந்தியாவில் அவை அழிவு நிலையில் உள்ளது. 

நேர்மையான தேர்தல் என்பது தலைமைக்கும், இந்திய மக்களுக்கும் சட்டத்தை உறுதிப்படுத்தும் செயல்முறையாக இருக்க வேண்டும். ஆனால், பிரச்னையே இதில் கறைபடும் போது தான் மொத்த அமைப்பின் மீதே சாதாரண மனிதன் நம்பகத்தன்மையை இழக்கிறான். 

தவறான செய்திகள், செய்திகளை நம்பவைக்கும் செயல்களின் அதிகரிப்பு, தகவல் திருட்டு, தகவல் அறுவடை போன்றவை  உலகம் முழுவதும் பொதுஜன வாக்கெடுப்பை பாதிப்படைய செய்கிறது. சிறந்த அரசை தேர்ந்தெடுப்பதற்காக கணக்கிடப்படும் பெரும்பான்மை முடிவுக்கான செயல்முறையையே இவை மாற்றியமைக்கிறது. இந்த அச்சுறுத்தலை தான் உலகம் முழுவதிலும் உள்ள ஜனநாயகம் தற்போது எதிர்கொண்டுள்ளது.  

தற்போதைய சட்டங்கள் தேர்தலில் பணபலத்தை தடுப்பதற்கு பெரிதளவில் உதவிகரமாக இல்லை. இந்தியாவுக்கும், இந்திய தேர்தலுக்கும் சட்டவிரோத பணபலமே முக்கியமான பிரச்னை. இன்றைய தேதியில் சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையை மேற்கொண்டாலும், அது இந்த பிரச்னைக்கு போதிய தீர்வாக இருக்காது. 

அதனால் தான் தேர்தல் ஆணையம், பல சீர்திருத்தங்களை பரிந்துரை செய்து வருகிறது" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com