சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் பின்னணியில் பாஜகவா? அமித் ஷா விளக்கம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வழக்கில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வழக்கில் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

கடந்த 2010-ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே மகாராஷ்டிர அரசு அணை கட்ட முடிவு செய்தது. அதை எதிர்த்து சந்திரபாபு நாயுடுவும், அவருடன் சேர்ந்து 15 பேரும் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்களுக்கு எதிராக மகாராஷ்டிர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை தூசி தட்டிய தர்மாபாத் நீதிமன்றம், அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது. வரும் 21-ஆம் தேதி, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவின் பின்னணியில் பாஜகவுக்கு தொடர்புக்கு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்து அமித் ஷா இன்று (சனிக்கிழமை) தெலங்கானாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

"இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியும் போது மகாராஷ்டிராவிலும், மத்தியிலும் காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. தேர்தல் நேரங்களில் மக்களின் அனுதாபங்களை பெற இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com