ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி வெற்றி

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 
ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி வெற்றி

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாட்டு நடப்புகளின் அடிப்படையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மாணவர் சங்கப் பிரதிநிதிகள் நிகழ்த்தும் விவாதமும், தேர்தல் முடிவும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபளிக்கும் என்பதால், இந்த நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனிப்பதுண்டு.

பதிவான வாக்குகளை அன்றைய இரவு 10 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் குறித்து தேர்தல் அதிகாரிகள் அறிவிக்கவில்லை என குற்றம்சாட்டி ஏபிவிபியினர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்து வாக்குப் பெட்டிகளையும், வாக்குச் சீட்டுகளையும் பறிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மாலை 6.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. ஜேஎன்யு குறைதீர் பிரிவின் இரண்டு ஆசிரியர்கள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட பிறகு 14 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது.

இதையடுத்து, தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது. அதில், ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி மாணவர்கள் அமைப்பு வெற்றி பெற்றது. 

மாணவர் சங்கத் தலைவராக சாய் பாலாஜி 2,161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவராக சரிகா சௌத்ரி 2,692 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பொதுச் செயலாளர் பொறுப்புக்கு அகமது 2,423 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இணைச் செயலாளராக அமுதா 2,047 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இடதுசாரி கூட்டணியில் அனைத்து இந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர் கூட்டமைப்பு, ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு, அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு ஆகிய மாணவ அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. 

இந்த தேர்தலில் ஆர்எஸ்எஸ் மாணவ அமைப்பான ஏபிவிபி மற்றும் காங்கிரஸை சேர்ந்த மாணவ சங்கமும் போட்டியிட்டன.  

இந்த தேர்தலில் 5,000 மாணவர்கள் தங்களது வாக்குகளை பதிவிட்டுள்ளனர். ஜேஎன்யு தேர்தலில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 67.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com