தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டி

தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டி

தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
 இதுகுறித்து ஹைதராபாதில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்து விட்டது. அக்கட்சியுடன் ஒருபோதும் பாஜக கூட்டணி வைக்காது.
 இதேபோல், வேறு எந்த கட்சிகளுடனும் பாஜக கூட்டணி வைக்காது. தெலங்கானா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். தேர்தலுக்குப் பிறகு, ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும்.
 காங்கிரஸýம், பிற கட்சிகளும் சேர்ந்து தெலங்கானாவில் மகா கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்கிறீர்கள். ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் அஞ்சய்யா, முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் ஆகியோரை காங்கிரஸ் கட்சி நடத்திய விதத்தை தெலுங்கு மக்கள் மறக்கவில்லை.
 மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை பிரதமர் மோடி முன்வைத்தபோது, அதை தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆதரித்தது. ஆனால், பின்னர் தனது நிலைப்பாட்டை அக்கட்சி மாற்றி கொண்டது.
 தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கும், முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். சட்டப் பேரவைக்கு 9 மாதங்களுக்கு முன்பே தேர்தல் நடத்தி, கூடுதல் செலவீனம் மூலம் ஏன் மாநில மக்கள் மீது சுமையை சுமத்துகிறீர்கள்? ஒரே நேர்தல் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்த சில நாள்களில், தெலங்கானா சட்டப் பேரவையை கலைப்பது தொடர்பான முடிவை ஏன் முதல்வர் சந்திரசேகர் ராவ் எடுத்தார்? இதற்கு அக்கட்சி பதிலளிக்க வேண்டும்.
 தெலங்கானா மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 4,200 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்கள் எதுவும், தெலங்கானாவில் முறையாக செயல்படுத்தப்படவில்லை. கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை தெலங்கானா ராஷ்டிர சமிதி நிறைவேற்றவில்லை. இதில் 2 படுக்கை வசதி கொண்ட வீடு கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியும் அடங்கும்.
 தெலங்கானா மாநிலத்துக்கு 13ஆவது நிதி ஆணைய காலத்தில் ரூ.15 ஆயிரம் கோடியே ஒதுக்கப்பட்டது. ஆனால், 14ஆவது நிதி ஆணையத்தால் ரூ.2.30 லட்சம் கோடி நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் மாகாணம் கடந்த 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த தினத்தை, மஜ்லீஸ் கட்சியின் நிர்பந்தம், வாக்கு வங்கி அரசியல் ஆகிய காரணங்களுக்காக தெலங்கானா அரசு கொண்டாடவில்லை என்றார் அமித் ஷா.
 "பாரிக்கர் விஷயத்தில் உரிய நேரத்தில் முடிவு': கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அவருக்கு பதிலாக வேறு யாரும் முதல்வர் பதவியில் நியமிக்கப்படுவாரா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அமித் ஷா பதிலளிக்கையில், "தற்போதைக்கு, பாரிக்கர் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறோம். இந்த விஷயத்தில் உரிய நேரத்தில் கட்சி முடிவெடுக்கும்' என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com