மல்லையா வெளியேற அனுமதியளித்தது மோடிக்கு பிடித்தமான சிபிஐ அதிகாரிதான்: ராகுல் காந்தி தாக்கு

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை பலவீனப்படுத்தியதும், நாட்டை விட்டு வெளியேற அவருக்கு அனுமதியளித்ததும் சிபிஐ அமைப்பில் இருக்கும்
மல்லையா வெளியேற அனுமதியளித்தது மோடிக்கு பிடித்தமான சிபிஐ அதிகாரிதான்: ராகுல் காந்தி தாக்கு

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை பலவீனப்படுத்தியதும், நாட்டை விட்டு வெளியேற அவருக்கு அனுமதியளித்ததும் சிபிஐ அமைப்பில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிடித்தமான அதிகாரிதான் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
 இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிபிஐ அமைப்பில் இருக்கும் குஜராத் மாநில அதிகாரி ஏ.கே. ஷர்மாதான், மல்லையாவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக் அவுட் நோட்டீûஸ பலவீனப்படுத்தினார். மல்லையா தப்பியோடவும் அவர்தான் அனுமதித்தார்.
 சிபிஐ அமைப்பில் இருக்கும் பிரதமர் மோடிக்கு பிடித்தமான அதிகாரி அவர். இந்த அதிகாரிதான், வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோர் தப்பியோடியதற்கும் காரணம் என்று அந்த பதிவுகளில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு மல்லையா சென்று விட்டார். இந்திய நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளிலும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், நாட்டை விட்டு மல்லையா வெளியேறுவதற்குபிரதமர் மோடியும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும்தான் உதவி செய்தனர் என்று காங்கிரஸ் கட்சியும், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
 இந்நிலையில், பிரிட்டன் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நடக்கும் வழக்கு விசாரணையில் அண்மையில் ஆஜராக வந்த மல்லையா, நாட்டை விட்டு கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியேறும் முன்பு மத்திய நிதியமைச்சரை சந்தித்ததாக தெரிவித்தார். மத்திய நிதியமைச்சரின் பெயரை அவர் வெளியிடாதபோதும், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அருண் ஜேட்லிதான், மத்திய நிதியமைச்சராக இருந்தார். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். எனினும், மல்லையாவை தாம் சந்திக்கவில்லை என்று அருண் ஜேட்லி மறுத்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com