மாயாவதியுடன் அகிலேஷ் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது: உ.பி. துணை முதல்வர்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடன் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவால் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது என்று உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மெளரியா கூறியுள்ளா
மாயாவதியுடன் அகிலேஷ் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது: உ.பி. துணை முதல்வர்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடன் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவால் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது என்று உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மெளரியா கூறியுள்ளார்.
 லக்னெளவில் பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் (ஓபிசி) அணி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கேசவ பிரசாத் மெளரியா கலந்து கொண்டு பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுதவதற்கு சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் விமர்சித்தார். அவர் மேலும் கூறியதாவது:
 அகிலேஷ் யாதவ், கட்சித் தலைவர் பதவியை தனது தந்தை முலாயம் சிங்கிடம் இருந்து பறித்துக் கொண்டார். அதுமட்டுமன்றி தனது சித்தப்பா சிவபால் யாதவிடம் சண்டையிட்டுக் கொண்டார். அவரால், தனது குடும்பத்தினரை ஓரணியில் திரட்ட முடியவில்லை. அப்படிப்பட்ட சூழலில், மாயாவதியுடன் அவரால் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட முடியும்?
 அகிலேஷ் யாதவ் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தார். குறிப்பிட்டுச் சொல்லும்படி அவர் சாதித்தது என்ன?
 கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலாகட்டும், 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலாகட்டும், யாதவ சமூகத்தினரின் ஆதரவு இல்லையெனில், பாஜகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது.
 அதேபோல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும், யாதவ சமூகத்தினரின் ஆதரவின்றி, பாஜகவால் வெற்றி பெற முடியாது. எனவே, யாதவ சமூகத்தினர் அதிகமுள்ள வாக்குச் சாவடிகளில் தாமரை மலர வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 74 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல், உலக அரங்கில் இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கான தேர்தலாகும். அதற்கான அதிகாரத்தை பிரதமர் மோடிக்கு நாம் வழங்க வேண்டும். கடந்த 2014, 2017-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், யாதவ சமூகத்தினர் அதிகமுள்ள வாக்குச் சாவடிகளில் பாஜக வெற்றி பெற்றது. இது, யாதவ சமூகத்தினர் சந்தர்ப்பவாதிகள் அல்ல. அவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் தேசியவாதிகள் என்பதையே காட்டுகிறது என்றார் கேசவ பிரசாத் மெளரியா.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com