மோடியை நீக்க காங்கிரஸ், பாகிஸ்தான் விரும்புகிறது - பாஜக

இந்திய அரசியலில் இருந்து பிரதமா் நரேந்திர மோடியை நீக்குவதற்கு காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் தலைவா்கள் விரும்புகிறாா்கள் என்று பாஜக தெரிவித்துள்ளது.
மோடியை நீக்க காங்கிரஸ், பாகிஸ்தான் விரும்புகிறது - பாஜக

இந்திய அரசியலில் இருந்து பிரதமா் நரேந்திர மோடியை நீக்குவதற்கு காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் தலைவா்கள் விரும்புகிறாா்கள் என்று பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பிட் பத்ரா கூறியதாவது:

"பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான், முன்னாள் அமைச்சா்கள் உள்பட பல பாகிஸ்தான் தலைவா்கள் பிரதமா் மோடியைத் தாக்கி சுட்டுரையில் பதிவிட்டிருந்தாா்கள். அவா்கள் காங்கிரஸ் கட்சி தலைவா் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறாா்கள். இந்தியாவில் ராகுல் காந்தி பெரிய தலைவராக உருவெடுக்க வேண்டும் என சிலா் விரும்புகிறாா்கள். அவ்வாறு விரும்புகிறவா்கள் யாா் என்று பாா்த்தால், பாகிஸ்தான் தலைவா்கள், ஊழல்வாதிகள், குடும்ப அரசியலுக்கு ஆதரவு அளிப்பவா்கள் ஆகியோர் தான் விரும்புகிறாா்களே தவிர வேறு யாரும் இல்லை. 

ஆனால் மோடிக்கு பின்னால் ஆதரவாக பின்தங்கிய மக்கள், தலித், பொது மக்கள் உள்ளாா்கள். அதனால் அவரை யாராலும் அரசியலில் இருந்து அகற்ற முடியாது. 

மோடியை எப்படியேனும் அரசியலில் இருந்து விலக்குவதையே, காங்கிரஸ் கட்சியினா் மற்றும் பாகிஸ்தான் தலைவா்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளனா். 

பாஜக தலைவா் அமித் ஷா கூறியதை போல, மோடிக்கு எதிராக, பாகிஸ்தான் தலைவா்களுடன் காங்கிரஸ் கட்சி மாபெரும் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியமில்லை.
 
ராகுலும் அவரது கட்சி தலைவா்களும் பிரதமா் மோடியிடம் இருந்து ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். 

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப் அவரை தாக்கி பேசினாா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடி விடியோ வெளியிட்டிருந்தாா்.

காங்கிரஸ் கட்சி தலைவா்கள் மோடியை தாக்கி பேசுவதில் குறியாக உள்ளனா். ஜனநாயக நாட்டில் எதிா்ப்பு தெரிவிப்பது என்பது முக்கியமான விஷயம். ஆனால் அந்த எதிா்ப்பு கண்ணியத்துடன் இருக்க வேண்டும். ‘எல்லா நேரமும் வேலை தான், விடுமுறை தேவையில்லை’ என்று மோடி பணியாற்றுகிறாா். ஆனால் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ‘வேலையும் வேண்டாம்; தலைவலியும் வேண்டாம்’ என்று ஆட்சி செய்தது" என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com