மத்திய இடைக்கால பட்ஜெட் 2019-20 நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேறியது. இது பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய பாஜக கூட்டணி அரசின் 6-ஆவது மற்றும் இறுதி பட்ஜெட் ஆகும்.
மாநிலங்களவையில் புதன்கிழமை மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ பிரதாப் சுக்லா, இடைக்கால பட்ஜெட், நிதி மசோதா மற்றும் நிதி ஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வந்தார். மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அந்த மசோதாக்கள் வாக்கெடுப்புக்கு வருவதாக அறிவித்தார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளான புதன்கிழமை இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக, மக்களவையில் கடந்த திங்கள்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. நிதி மசோதா செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வருவாய் பிரிவினர் என நாட்டின் பெரும்பான்மை பிரிவினரை திருப்திப்படுத்தும் வகையிலான சலுகைகள் நிறைந்த இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









