ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

மம்தாவை குற்றம்சாட்டி கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி

மேற்கு வங்கத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய தற்கொலைக்கு அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜியே காரணம் என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த  நிகழ்வை, அந்த மாநிலத்தின்

Updated On :26 பிப்ரவரி 2019, 12:57 am IST


மேற்கு வங்கத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய தற்கொலைக்கு அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜியே காரணம் என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த  நிகழ்வை, அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 
மேற்கு வங்கத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த கெளரவ் சந்திரதத் கடந்த வாரம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1986-ஆம் ஆண்டு ஐபிஎஸ்-ஆக பணியமர்த்தப்பட்ட அவர், தன்னுடைய  ஓய்வு காலத்திற்கு முன்பு கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்ததால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதுவே பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாகவும், தனது தற்கொலைக்கு முதல்வர் மம்தா பானர்ஜியே காரணம் எனக்கூறி 6 பக்கத்துக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து இறந்தார்.
அந்தக் கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: என்னைப் பணியில் இருந்து வெளியேற்ற தொடர்ந்து கொடுமைப்படுத்தவும், துன்புறுத்தவும் வேண்டி, முதல்வர் (மம்தா) உத்தரவுப்படி மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்தனர். இதன் காரணமாக நிம்மதி இழந்து தவித்து வந்த நான், எனக்கு நானே விதித்துக் கொண்ட தண்டனையே இந்த முடிவு. இதன்மூலம், மோசமான மூத்த காவல்துறை அதிகாரிகளை வெளியேற்றி காவல்துறையை தூய்மைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டால் அதுவே எனக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். 
நேர்மையாகவும், கடின உழைப்பையும் செலுத்தும் என்னைப் போன்றவர்களும், நஸ்ரூல் இஸ்லாம் போன்ற காவல்துறை அதிகாரிகளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கொத்தடிமைகளாக செயல்பட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டனர். ஆளுங்கட்சியினர் (திரிணமூல் கட்சி) பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற நிர்பந்தங்களை தடுக்கும் ஒருவிதமான போராட்டமே என்னுடைய தற்கொலை என அக்கடிதத்தில் கெளரவ் சந்திரதத் தெரிவித்துள்ளார். 
இக்கடிதத்தின் நகலை கெளரவ் சந்திரதத் பல்வேறு மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார். 
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் கூறியதாவது: கெளரவ் சந்திரதத் தற்கொலையின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளது. முதல்வர் மீதான குற்றச்சாட்டை மையப்படுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளதால் அதன் உண்மைத்தன்மை குறித்து நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
 சிபிஐ விசாரணை தேவை:  இதுதொடர்பாக, திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் கூறுகையில், கெளரவ் சந்திரதத்தின் தற்கொலை தொடர்பாக மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாநில போலீஸார் விசாரணை நடத்தினால் உண்மைத் தன்மை மறைக்கப்பட வாய்ப்புள்ளது என்றார். 
திரிணமூல் காங்கிரஸ் மறுப்பு:  இதுதொடர்பாக மம்தா பானர்ஜி உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும், மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக் கூறுகையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அறிவுப்பூர்வமற்றது, ஆதாரமற்றது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.