வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில்தான் அதிகபட்சமாக 20.1 லட்சம் இளைய தலைமுறையினர் முதல்முறையாக வாக்களிக்க இருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் 16.7 லட்சம் பேரும், மத்தியப் பிரதேசத்தில் 13.6 லட்சம் பேரும் முதல்முறையாக தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, அடுத்த மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 8.4 கோடி பேர் புதிதாக வாக்களிக்க இருக்கின்றனர். இவர்களில் 18 முதல் 19 வயதுக்குள்பட்டவர்கள் மட்டும் 1.5 கோடி பேர் ஆவர்.
ராஜஸ்தான், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முதல்முறை வாக்காளர்கள் உள்ளனர். ராஜஸ்தானில் 12.8 லட்சம் பேரும், மகாராஷ்டிரத்தில் 11.9 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 8.9 லட்சம் பேரும், ஆந்திரத்தில் 5.3 லட்சம் பேரும் முதல்முறையாக வாக்களிக்க இருக்கின்றனர். தலைநகர் தில்லியில் 97 ஆயிரத்து 684 புதிய வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.