தமிழகத்தில் நீட் இல்லை, மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.
தமிழகத்தில் நீட் இல்லை, மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை


புது தில்லி: 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல், அதன் சிறப்பம்சங்களை அறிவித்தார்.

அதில்,

  • இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை.
     
  • 2020க்குள் இந்தியாவில் காலியாக உள்ள 20 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
     
  • நியாய் திட்டத்தில் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் செலுத்தப்படும்.
     
  • 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
     
  • விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
     
  • இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 6% கல்விக்காக ஒதுக்கப்படும்.
     
  • 2030க்குள் இந்தியாவில் வறுமை ஒழிக்கப்படும்.
     
  • இந்தியாவில் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த முறை ரத்து செய்யப்படும் என்று ராகுல்  அறிவித்தார்.
     
  • இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com