370-ஆவது சட்டப் பிரிவை நீக்கினால் இந்தியாவில் இருந்து காஷ்மீர் பிரியும்

370ஆவது சட்டப் பிரிவை நீக்கினால், இந்தியாவில் இருந்து ஜம்மு-காஷ்மீர் பிரிந்து விடும் என்று  மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், அந்த
370-ஆவது சட்டப் பிரிவை நீக்கினால் இந்தியாவில் இருந்து காஷ்மீர் பிரியும்


370ஆவது சட்டப் பிரிவை நீக்கினால், இந்தியாவில் இருந்து ஜம்மு-காஷ்மீர் பிரிந்து விடும் என்று  மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி எச்சரித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அனந்த்நாத் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். இதையொட்டி, அனந்த்நாக் தொகுதியில் தேர்தல் அதிகாரியிடம் மெஹபூபா முஃப்தி தனது வேட்பு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
நாட்டுக்கு வரும் 2020ஆம் ஆண்டுதான் ஜம்மு-காஷ்மீர் விடுக்கும் இறுதி காலக்கெடு ஆகும். இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீரை இணைப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை நீக்கினால், நாட்டுடனான எங்கள் மாநிலத்தின் உறவு முடிவுக்கு வந்து விடும்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2015ஆம் ஆண்டில் கூட்டணி அரசு அமைந்தபோது, எனது தந்தை முஃப்தி முகமது சயீதும், பாஜகவும் உருவாக்கிய கூட்டணி திட்டத்திலும் இது ஏற்கப்பட்டுள்ளது. இதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் மெஹபூபா முஃப்தி.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் 370ஆவது பிரிவை நீக்கும்  விவகாரத்தில் பாஜக உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இதற்கு மெஹபூபா முஃப்தி, அமித் ஷா பகல் கனவு காண்கிறார் என பதிலடி கொடுத்திருந்தார். அதையடுத்து தற்போது ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் 370ஆவது பிரிவை நீக்கினால், இந்தியாவில் இருந்து ஜம்மு-காஷ்மீர் பிரிந்து விடும் என்று மெஹபூபா முஃப்தி எச்சரித்துள்ளார்.
அனந்த்நாத் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூதி செவ்வாய்க்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அனந்த்நாக் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சோபி முகம்மது யூசுப் ஏற்கெனவே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டார். இதேபோல், 2 சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. இதில் அனந்த்நாக் தொகுதி, 4 மாவட்டங்களில் பரவியுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் வேறு வேறு தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஏப்ரல் 4ஆம் தேதி கடைசி நாளாகும். இதன்மீது ஏப்ரல் 5ஆம் தேதி பரிசீலனை நடத்தப்படுகிறது. வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 8ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com