மோடி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் என்னவாகும் தெரியுமா?: எச்சரித்த மமதா 

பிரதமர் மோடி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் உள்ள ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு சர்வாதிகாரத்துக்கு மாற்றி விடுவார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
மோடி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் என்னவாகும் தெரியுமா?: எச்சரித்த மமதா 

கூச் பெஹர்: பிரதமர் மோடி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் உள்ள ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு சர்வாதிகாரத்துக்கு மாற்றி விடுவார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 683 கி.மீ. தொலைவில், நேபாளம், பூட்டான் நாடுகளின் எல்லை பகுதியில் அமைந்துள்ள கூச் பெஹர் என்ற இடத்தில் வியாழனன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:

பிரதமர் மோடியிடம் கொள்ளையடி, கலகம் செய் மற்றும் மக்களைக் கொல் ஆகிய மூன்று கோஷங்கள் மட்டுமே உள்ளன.

வங்கதேசத்துடன் கடந்த அறுபது ஆண்டுகளாக நிலவி வந்த  பிரச்சினைக்கு 2015-ல் திரிணமூல் காங்கிரஸ் அரசு தீர்வு கண்டது. ஆனால் பாஜக அரசோ சட்டப்பூர்வ குடிமக்களை எல்லாம் அகதிகளாக மாற்றுவதற்கு குடிமக்கள் திருத்த மசோதாவைக் கொண்டுவந்தது.

தேசிய குடிமக்கள் பதிவிட்டு முறையை திரிணமூல் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது.யார் இந்த  நாட்டில் இருக்க வேண்டும்? யார் வெளியேற வேண்டும் என்பதை மோடி ஒருவர் மட்டும் தீர்மானிக்க முடியாது.

இந்த நாட்டின் சட்டபூர்வ குடிமக்களை அகதிகளாக மாற்றுவதற்கான பாஜகவின் இந்த சதித் திட்டம் குறித்து நாம் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி கண்ட சாய்வாலா (டீக்கடைக்காரர்) தற்போது சவுக்கிதார் (காவலாளி) என்று பிரச்சாரத்தை மாற்றிக் கொண்டு மக்களை முட்டாளாக்கி வருகிறார்

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com