தேர்தல் ஆணையம் சிறைவைக்கப்படும் என சர்ச்சை கருத்து: பிரகாஷ் அம்பேத்கர் மீது வழக்குப்பதிவு

தேர்தல் ஆணையம் சிறைவைக்கப்படும் என சர்ச்சை கருத்து: பிரகாஷ் அம்பேத்கர் மீது வழக்குப்பதிவு

ஆட்சிக்கு வந்தால் தேர்தல் ஆணையம் சிறைவைக்கப்படும் என்று பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்ததையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆட்சிக்கு வந்தால் தேர்தல் ஆணையம் சிறைவைக்கப்படும் என்று பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்ததையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

மஹராஷ்டிர மாநிலம் யவத்மல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரகாஷ் அம்பேத்கர் இன்று (வியாழக்கிழமை) பேசியதாவது:

"ஜனநாயக முறையில், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு புல்வாமா தாக்குதல் குறித்து பேச சுதந்திரம் உள்ளபோதும், அதுகுறித்து பேசக்கூடாது என்று உத்தரவுகள் வருகின்றன. எங்கள் கட்சி மட்டும் ஆட்சிக்கு வந்தால், நாங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தை சும்மா விட மாட்டோம். இந்திய தேர்தல் ஆணையத்தை நிச்சயமாக இரண்டு நாட்களுக்கு சிறை வைப்போம்.

 இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். அது பாஜக-வுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அம்பேத்கரின் இந்த பேச்சுக்கு திக்ராஸ் காவல் நிலையத்தில் யாவத்மல் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனையியல் சட்டம் 503, 505 மற்றும் 189 ஆகிய பிரிவுகளின் கீழ் அம்பேத்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் திலிப் ஷிண்டே கூறுகையில், "அம்பேத்கரின் பேச்சு குறித்து உள்ளூர் தேர்தல் அதிகாரிகளிடம் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது" என்றார். 

இதுகுறித்து பிரகாஷ் அம்பேத்கரிடமே கேட்ட போது, "நான் பொதுவான கருத்தாக தான் கூறினேன். ஆனால், தேர்தல் ஆணையம் குறித்த எனது கருத்து மட்டும் தனித்து பார்க்கப்படுகிறது" என்றார்.  

பிரகாஷ் அம்பேத்கர், மஹாராஷ்டிர மாநிலத்தின் சோலாபூர் மற்றும் அகோலா ஆகிய இரு தொகுதிகளிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com