பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு தடை கோரும் மனு: விசாரணை ஒத்திவைப்பு 

பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு தடை கோரும் மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு தடை கோரும் மனு: விசாரணை ஒத்திவைப்பு 

புது தில்லி: பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு தடை கோரும் மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் விதமாக, பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ஏப்ரல் 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடுவதற்கு அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்தார்.  ஆனால், சில காரணங்களுக்காக, திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்திருப்பதாக முதல்நாளான வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதனிடையே, இத்திரைப்பட வெளியீட்டுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பார்வையாளர்களையும், வாக்காளர்களையும் கவரும் விதமாக, பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களவைத் தேர்தல் முடிவடையும் வரை, இத்திரைப்படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரிக்க ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம், மனுவை வரும் திங்கள்கிழமை (ஏப்.8) விசாரிப்பதாகத் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் வெள்ளிக்கிழமை (05.04.19) கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் பரிசீலனைக்கு வந்தது. அப்போது, பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை நாங்கள் இன்னும் பார்க்காததால், நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளதா எனத் தெரியவில்லை. இருப்பினும், அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. வழக்கமான முறையில் விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.

இந்நிலையில் பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு தடை கோரும் மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கானது திங்களன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், படத்தின் பிரதி ஒன்றை மனுதாரருக்கு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அவ்வாறு உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று மறுத்த நீதிமன்றம், தற்போதைய சூழ்நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு தடை கோரவோ, முக்கியமாக படத்தில் பேசப்பட்டுள்ள விஷயங்களுக்கு தடை கோரவோ போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவித்து விட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com