Enable Javscript for better performance
கமல்நாத் ஆதரவாளர் வீடுகளில் இரண்டாவது நாளாக சோதனை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கமல்நாத் ஆதரவாளர் வீடுகளில் இரண்டாவது நாளாக சோதனை

    By  புது தில்லி/போபால்,  |   Published On : 09th April 2019 01:30 AM  |   Last Updated : 09th April 2019 01:30 AM  |  அ+அ அ-  |  

    KAMALNATH

    மத்தியப் பிரதேச முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் ஆதரவாளர் வீடுகளில் வருமான வரித் துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர்.
     இதில், முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கமல்நாத்தின் உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோரது வீடுகள், அலுவலகங்கள் உள்பட 52 இடங்களில் வருமான வரித்துறையினர் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர். வருமான வரி ஏய்ப்பு, தேர்தலில் ஹவாலா பணப்புழக்கம் ஆகிய புகார்களின் அடிப்படையில் தில்லி, இந்தூர், போபால் உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
     இந்நிலையில், கமல்நாத்தின் தனிப்பாதுகாப்புப் பிரிவு முன்னாள் அதிகாரியான பிரவீண் கக்கத், முன்னாள் ஆலோசகர் ராஜேந்திர குமார் மிக்லானி, அஷ்வினி சர்மா மற்றும் கமல்நாத்தின் உறவினருக்குச் சொந்தமான "மோசர் பாயர்' நிறுவனத்தில் பணி புரியும் அதிகாரிகள், மற்றொரு உறவினர் ரதுல் புரி உள்ளிட்டோரின் இடங்களில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
     இதில், முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதை வருமான வரித் துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதபோதிலும், சுமார் ரூ.10 கோடி வரை கைப்பற்றப்பட்டிருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
     இந்தச் சோதனையின்போது, ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வரும் பராஸ் மால் லோதாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சோதனை குறித்து, மத்திய நேரடி வரிகள் ஆணையத்துக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் முதல் கட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp