Enable Javscript for better performance
ரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

    By DIN  |   Published On : 09th April 2019 07:56 PM  |   Last Updated : 09th April 2019 07:56 PM  |  அ+அ அ-  |  

    SUPREMEcourtcut


    ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை (புதன்கிழமை) வழங்குகிறது. 

    பிரான்ஸுடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பளித்திருந்தது.

    இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 

    இந்த வழக்கு விசாரணையின் போது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த பாதுகாப்புத் துறையின் ரகசிய ஆவணங்களை நகலெடுத்து மனுதாரர்கள் தாக்கல் செய்தனர். மத்திய அரசின் அனுமதி பெறாமல் இதுபோன்ற ரகிசய ஆவணங்களை நகலெடுத்து தாக்கல் செய்திருப்பது திருட்டுக்கு சமம், இது தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்று மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.  

    இதையடுத்து, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால், பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்தம், தனித்தன்மை கொண்டது. இந்திய ஆதாரங்கள் சட்டத்தின் 123-ஆவது பிரிவின்படி, அதனைத் தகுந்த அமைச்சகத்தின் அனுமதியின்றி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. 
    தகவல் அறியும் உரிமைச் சட்டமும் இதனை உறுதிசெய்கிறது. நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பு அளிக்கும் வகையிலான ஆவணங்களை ஆதாரங்களாக யாரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது. அனைத்தையும் விட நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று வாதாடினார்.

    இதைத்தொடர்ந்து, மனுதாரர்களில் ஒருவரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், அரசு தலைமை வழக்குரைஞர் குறிப்பிடும் தனித்தன்மை வாய்ந்த ஆவணங்கள் அனைத்தும் ஏற்கெனவே பொதுவெளியில் வெளியிடப்பட்டுவிட்டன. புலனாய்வு அமைப்புகளின் ஆவணங்களைத் தவிர மற்ற ஆவணங்கள் எதுவும் தனித்தன்மை வாய்ந்தது இல்லை என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டமும் உறுதி செய்துள்ளது என்று வாதத்தை முன்வைத்தார். 

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில், மத்திய அரசின் ஆட்சேபம் மீது முதலில் முடிவு எடுக்கப்பட்டபிறகு, மறுஆய்வு மனுக்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

    இந்நிலையில், மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.  


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp