பாஜக தேர்தல் அறிக்கை திமிர் கொண்ட, குறுகிய பார்வை: ராகுல் ட்விட்டரில் தாக்கு

பாஜக-வின் தேர்தல் அறிக்கை தனிமைப்படுத்தப்பட்டவரின் குரலாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார். 
பாஜக தேர்தல் அறிக்கை திமிர் கொண்ட, குறுகிய பார்வை: ராகுல் ட்விட்டரில் தாக்கு

பாஜக-வின் தேர்தல் அறிக்கை தனிமைப்படுத்தப்பட்டவரின் குரலாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

மிகத்தீவிர கலந்தாய்வுகளுக்குப் பிறகு தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது இந்தியாவிலுள்ள 100 மில்லியன் மக்களின் குரலாக ஒலிக்கிறது. அதனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துள்ளது. 

ஆனால், பாஜக தேர்தல் அறிக்கை வெறும் 4 சுவர்களுக்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தனிமைப்படுத்தப்பட்டவரின் குரலாக உள்ளது. மேலும் தேர்தல் அறிக்கை மிகவும் குறுகிய பார்வையுடனும், திமிராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தபோது பொருளாதாரத்தில் இந்தியா 11-ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

எனவே, ஏசி அறையில் உள்ளவர்களால் வறுமையை ஒழிக்க முடியாது. 6 கோடி மக்களிடம் ஆலோசிக்கப்பட்ட பிறகு தான் சங்கல்ப பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பாஜக தேர்தல் வாக்குறுதி வெளியீட்டின் போது பிரதமர் மோடி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com