தன்பாத் தொகுதியில் கீர்த்தி ஆசாத் போட்டி: காங்கிரஸ்

ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பாஜக முன்னாள் மூத்த தலைவர் கீர்த்தி ஆசாத் போட்டியிடுகிறார்

ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பாஜக முன்னாள் மூத்த தலைவர் கீர்த்தி ஆசாத் போட்டியிடுகிறார்.
 பாஜக அதிருப்தி தலைவரான கீர்த்தி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் அண்மையில் இணைந்தார். இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கீர்த்தி ஆசாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 பிகார் மாநிலம், தர்பாங்கா தொகுதி முன்னாள் எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத், அத்தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பினார். பிகாரில் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தத்தில், அத்தொகுதி ஆர்ஜேடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தன்பாத் தொகுதி வேட்பாளராக கீர்த்தி ஆசாத்தை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசிய கீர்த்தி ஆசாத், அக்கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com