அரசியலமைப்புக்கு எதிரான செயல்பாடு: மெஹபூபா, ஒமர், ஃபரூக் தேர்தல் தடை மீதான மனு!

மெஹபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதால், தேர்தலில் போட்டியட தடை...
அரசியலமைப்புக்கு எதிரான செயல்பாடு: மெஹபூபா, ஒமர், ஃபரூக் தேர்தல் தடை மீதான மனு!

மெஹபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதால், தேர்தலில் போட்டியட தடை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான இம்மூவரும், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது பாஜக தெரிவித்து வரும் 370 சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவ்வாறு சிறப்பு சட்டத்தை நீக்கினால் இந்தியாவில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தனியாக பிரிப்பதாக சூளுரைத்துள்ளனர்.

எனவே, இம்மூவரும் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக இனவிரோத அரசியல் செய்து வருவதால் தேர்தலில் போட்டியிட தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையை மற்றொரு அமர்வு ஏப்ரல் 12-ஆம் தேதி விசாரிக்கும் என தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com