Enable Javscript for better performance
பாஜகவில் குஜ்ஜார் தலைவர் கிரோரி சிங்- Dinamani

சுடச்சுட

    

    பாஜகவில் குஜ்ஜார் தலைவர் கிரோரி சிங்

    By DIN  |   Published on : 11th April 2019 01:28 AM  |   அ+அ அ-   |    |  

    amithsha

    தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்ற குஜ்ஜார் தலைவர் கிரோரி சிங்.


    ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்திய அந்த சமூகத் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா பாஜகவில் இணைந்தார்.
    தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில பாஜக மேலிடப் பொறுப்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். கிரோரி சிங்கின் மகன் விஜய் பன்சால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் பலரும் பாஜகவில் ஐக்கியமாகினர்.
    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரோரி சிங், பிரதமர் மோடியின் பணியாற்றும் திறன் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவர் சாமானிய மக்களுடன் வெகு இயல்பாக கலந்துரையாடி, அவர்களது பிரச்னைகளை எளிதில் புரிந்து கொள்கிறார். நமது நாட்டில் இப்போது மிகச் சிறந்த தலைவராக மோடி உள்ளார். எனவே, பாஜகவில் இணைய முடிவு செய்தேன். ராஜஸ்தானில் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்தவர்களுடன் நான் பழகியுள்ளேன். இரு கட்சிகளின் கொள்கைகளையும் ஒப்பிட்ட பிறகு பாஜகவின் கொள்கைகள் என்னை வெகுவாக ஈர்த்தன என்றார். முன்னதாக, ஜாவடேகருடன் சென்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் கிரோரி சிங் சந்தித்தார்.
    கிரோரி சிங்கின் வரவு ராஜஸ்தானில் குஜ்ஜார் மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கை அதிகரித்துள்ளது.
    முன்னதாக, ராஜஸ்தானில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்கள் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க கோரி, அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் குஜ்ஜார் சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இதில் தோல்பூர் மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதுடன், போலீஸ் வாகனங்களுக்கும் தீவைத்தனர். 
    இதையடுத்து, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். எனினும், வன்முறை முடிவுக்கு வராததால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வன்முறையாளர்களை விரட்டினர். சாலை, ரயில் போக்குவரத்தை போராட்டக்காரர்கள் முடக்கியதால் ஒரு வாரத்துக்கு மேல் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.
    குஜ்ஜார் மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்ய எப்போதும் துணைநிற்போம் என்று ராஜஸ்தான் மாநில அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.


     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp