Enable Javscript for better performance
ரஃபேல் ஒப்பந்த வழக்கு தீர்ப்பு: எதிர்க்கட்சிகள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ரஃபேல் ஒப்பந்த வழக்கு தீர்ப்பு: எதிர்க்கட்சிகள் வரவேற்பு

    By DIN  |   Published on : 11th April 2019 01:15 AM  |   அ+அ அ-   |    |  

    rafel


    ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில், மத்திய அரசின் ஆட்சேபங்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்ததற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
    உச்சநீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதாவது:
    நீங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) எங்கு வேண்டுமானாலும் ஓடி ஒளிந்துகொள்ளலாம். ஆனால், உண்மை ஒருநாளில் வெளிப்பட்டே தீரும். ரஃபேல் விவகாரத்தில் உண்மையைக் கண்டறிவதற்கான தடைகள், ஒவ்வொன்றாக நீங்கிவருகின்றன. இனியும், அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் பின்னால் ஒளிந்துகொள்ள முடியாது. 
    ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்ட ஆங்கில நாளிதழ் மீது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோடி அரசு மிரட்டி வந்தது. நீங்கள் (பிரதமர் மோடி) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த விவகாரத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது என்று அவர் பதிவிட்டார்.
    மன்னிப்பு கேட்க வேண்டும்: தீர்ப்பு தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ரஃபேல் ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழலை, தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி மோடி அரசு மறைக்க முற்பட்டது. ஆனால், அந்த முயற்சிகள் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளன. இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்திலும், மற்ற இடங்களிலும் தொடர்ந்து பொய் கூறியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
    தேசப் பாதுகாப்பில் சமரசம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஊழலுக்காக தேசப் பாதுகாப்பில் மோடி அரசு சமரசம் செய்துகொண்டுள்ளது. ரஃபேல் விவகாரத்தில் நாங்கள் குற்றமற்றவர்கள் என்று பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது அவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திய வரலாற்றில் மிகவும் மோசமான ஊழல் இதுவாகும். பாஜக அரசை வெளியேற்றுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp