ரஷ்யாவின் மிக உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு

ரஷ்ய நாட்டின் மிக உயரிய விருதான 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் மிக உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு

புது தில்லி: ரஷ்ய நாட்டின் மிக உயரிய விருதான 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக, ‘புனித ஆண்ட்ரூ’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.

இந்த தகவலை இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகமும் உறுதி செய்து அறிவித்துள்ளது.

முன்னதாக பிரதமர் மோடிக்கு ஐ.நா சபை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இதுவரை 8 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com