நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள்:  சீறிய உச்ச நீதிமன்றம் 

நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள் என்று அயோத்தியில் பூஜை நடத்த அனுமதி கோரிய மனுதாரரிடம்  உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.
நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள்:  சீறிய உச்ச நீதிமன்றம் 

புது தில்லி: நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள் என்று அயோத்தியில் பூஜை நடத்த அனுமதி கோரிய மனுதாரரிடம்  உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக மூவர் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள் என்று அயோத்தியில் பூஜை நடத்த அனுமதி கோரிய மனுதாரரிடம்  உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியைத் தவிர மீதமுள்ள 67.7 ஏக்கர் நிலத்தில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

வெள்ளியன்று அந்த மனுவானது பரிசீலனைக்கு வந்தபோது அதனை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம், “நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள்; யாரையாவது சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று கோபத்துடன் தெரிவித்தது.  

அத்துடன் இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு ஏற்கனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த ரூ. 5 லட்சம் அபராதத்தை திரும்பப்பெறவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com