ஸ்மிருதி இரானி பட்டப்படிப்பு முடித்தாரா? இல்லையா?: மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் மத்திய அமைச்சரின் கல்வித்தகுதி! 

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி மீண்டும் தேர்தல் களத்தில் சர்ச்சை உள்ளாக்கும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஸ்மிருதி இரானி பட்டப்படிப்பு முடித்தாரா? இல்லையா?: மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் மத்திய அமைச்சரின் கல்வித்தகுதி! 

புது தில்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி மீண்டும் தேர்தல் களத்தில் சர்ச்சை உள்ளாக்கும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். தற்போது அவர் தாக்கல் செய்துள்ள  வேட்பு மனுவில், 4.71 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது என்றும் பட்டப்படிப்பை தான் முடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது 1993-ம் ஆண்டு 12-ம் வகுப்பு முடித்த பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் தொலைத்தூரக் கல்வி மூலமாக பி.காம் பட்டப்படிப்புக்கு சேர்ந்ததாகவும், மூன்று ஆண்டு படிப்பை நிறைவு செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 1994-ம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அப்படியென்றால் அவர் தற்போது தவறான தகவலை கூறுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதுதொடர்பாக காங்கிரஸ் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி செய்தோயாளர்களிடம் கூறியதாவது:

ஸ்மிருதி இரானி பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்பதை தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். அப்படியானால் இதுவரை அவர் ஏன் பொய் சொல்லிக் கொண்டு இருந்தார்?  அவர் கூறி வந்த தொடர்ச்சியான பொய் தற்போது உறுதியாகியுள்ளது.

இப்படி தேர்தல் ஆணையத்திடம் தகவல்களை தவறாகக் கூறி ஏமாற்றிய அவரது வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் அவர் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com