சுடச்சுட

  

  மர்ம பெட்டி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை

  By ANI  |   Published on : 14th April 2019 09:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  anand_sharma

   

  பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட மர்ம பெட்டி தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.

  கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவரது ஹெலிகாப்டரில் இருந்து ஒரு பெட்டி கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த ஷர்மா கூறுகையில்,

  ஹெலிகாப்டரில் இருந்து ஒரு பெட்டி மர்மமான முறையில் கொண்டு செல்லப்பட்டது. அது பாதுகாப்பு தொடர்பானதும் கிடையாது.எனவே தேர்தல் ஆணையம் அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அந்த மர்ம பெட்டியில் உள்ளதை கண்டறிந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார்.

  இதுதொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்டரில் இருந்து ஒரு பெட்டி அவசரமாக கொண்டு செல்லப்பட்டு ஒரு காரில் வைப்பது போன்ற விடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai