அறிக்கைகளில் மட்டுமே இடம்பெறும் மகளிர் இடஒதுக்கீடு: 67 ஆண்டுகளில் இது தான் மாற்றமா?

பெண்களுக்கு அதிகாரமளிக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் காலம் காலமாக குரல் எழுப்பி வருகின்றன. ஆனால், 7 ஆண்டுகளில் இது தான் மாற்றமா?
அறிக்கைகளில் மட்டுமே இடம்பெறும் மகளிர் இடஒதுக்கீடு: 67 ஆண்டுகளில் இது தான் மாற்றமா?


பெண்களுக்கு அதிகாரமளிக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் காலம் காலமாக குரல் எழுப்பி வருகின்றன. 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலும் கூட பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக அறிவித்துள்ளது. 

ஆனால், செயல் அளவில் பார்த்தால் இதில் எந்தவித முன்னேற்றமும் அடையவில்லை. 

1952-இல் முதல் மக்களவை அமைந்த போது, மொத்தம் 24 பெண்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். அதன்பிறகு, 67 ஆண்டுகள் ஆகியும் மக்களவை பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரிதளவு மாற்றம் நிகழவில்லை. 16-ஆவது மக்களவையில் மொத்தம் 66 பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். 67 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 24-இல் இருந்து 66-ஐ தான் தொட்டுள்ளது. 

 மக்களவைபெண் உறுப்பினர்கள்
எண்ணிக்கை
1.முதல் மக்களவை24
2.2-ஆவது மக்களவை24
3.3-ஆவது மக்களவை37
4.4-ஆவது மக்களவை33
5.5-ஆவது மக்களவை28
6.6-ஆவது மக்களவை21
7.7-ஆவது மக்களவை32
8.8-ஆவது மக்களவை45
9.9-ஆவது மக்களவை28
10.10-ஆவது மக்களவை42
11.11-ஆவது மக்களவை41
12.12-ஆவது மக்களவை44
13.13-ஆவது மக்களவை52
14.14-ஆவது மக்களவை52
15.15-ஆவது மக்களவை64
16.16-ஆவது மக்களவை66

2009-இல் காங்கிரஸ் கட்சியின் மீரா குமார் மக்களவையின் முதல் பெண் சபாநாயகராக பொறுப்பேற்றார். அவர் 2014 வரை சபாநாயகராக அந்த பொறுப்பை வகித்தார். இதைத்தொடர்ந்து, 2014-இல் பாஜகவின் சுமித்ரா மகாஜன் 2-ஆவது பெண் சபாநாயகராக பொறுப்பேற்றார். 

மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. ஆனால், அதை எந்த கட்சியும் செயல்படுத்தவில்லை. 

காங்கிரஸ் கட்சி 2009, 2014 ஆகிய ஆண்டுகளின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்ற வாக்குறுதியை அளித்திருந்தது. தற்போதைய தேர்தல் அறிக்கையிலும் அது இடம்பெற்றுள்ளது. 

பாஜக 2014 ஆண்டில் தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அது 2019-ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1999, 2009 ஆகிய ஆண்டுகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதேபோல், தற்போது 2019 தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com