பிரிட்டன் தூதர் ஆழ்ந்த வருத்தம்

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்கு தங்களது நாடு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்வதாக இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் டொமினிக் அஸ்குவித் தெரிவித்துள்ளார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்கு தங்களது நாடு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்வதாக இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் டொமினிக் அஸ்குவித் தெரிவித்துள்ளார்.
 ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள நினைவிடத்துக்கு டொமினிக் சனிக்கிழமை காலை சென்றார். பின்னர் அங்குள்ள நினைவிடத்தில் மலர் மாலை வைத்து அவர் மரியாதை செலுத்தினார்.
 இதைத் தொடர்ந்து, நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகத்தில் அவர் தனது கருத்துகளை பதிவு செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜாலியன் வாலாபாக்கில் 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள், பிரிட்டன்-இந்தியா வரலாற்றில் அவமானகரமான சம்பவமாக உள்ளது. அப்போது நடந்த நிகழ்வுகளுக்காகவும், அதில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காகவும் பிரிட்டன் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. அதேநேரத்தில் 21ஆம் நூற்றாண்டை வளமானதாக்க இந்தியாவும், பிரிட்டனும் இணைந்து செயல்பட உறுதி பூண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
 இதையடுத்து செய்தியாளர்களுக்கு டொமினிக் அளித்த பேட்டியில், "பிரிட்டன்-இந்திய வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் அவமானகரமான அடையாளமாக உள்ளது என பிரதமர் தெரசா மே புதன்கிழமை தெரிவித்தார். பிரிட்டன் ஏன் மன்னிப்புக் கேட்கவில்லை? என கேட்கிறீர்கள். இது மிகவும் முக்கியமான கேள்விதான். இருப்பினும், இங்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தோருக்கு மரியாதை செலுத்தவும், அந்த நிகழ்வுக்காக பிரிட்டன் அரசு மற்றும் பிரிட்டன் மக்களின் துயரத்தை தெரிவிக்கவும்தான் நான் இங்கு வந்துள்ளேன். ஆதலால் அதுகுறித்து மட்டுமே என்னால் பதிலளிக்க முடியும். நீங்களும் அதுகுறித்து மட்டுமே கேள்வி கேளுங்கள்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com