சுடச்சுட

  

  ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்

  By ANI  |   Published on : 15th April 2019 12:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dravid


  பெங்களுரு: கர்நாடகா தேர்தல் ஆணையத்தின் தூதரான கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

  அனைவரையும் வாக்களிக்குமாறு வலியுறுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வந்த ராகுல் டிராவிட், ஏப்ரல் 18ம்  தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டதை ஊடகங்கள் சுட்டிக்காட்டின. 

  இந்த நிலையில், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

  அதாவது, அவர் தற்போது வீட்டை மாற்றியதாலேயே இந்த குழப்பம் நேரிட்டதாகக் கூறியுள்ளது.

  கர்நாடக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறுகையில், ராகுல் காந்தி தற்போது புதிய வீட்டுக்கு மாறியுள்ளார். இதுவரை அவர் தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

  டிராவிட்டின் சகோதரர் ஃபார்ம் 7ஐ பூர்த்தி செய்து, அதில் டிராவிட் தற்போது இந்த வீட்டில் வசிக்கவில்லை என்பதால் அவரது பெயரை நீக்குமாறு கோரிக்கை வைத்ததால், வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது.

  அதே சமயம், புதிய முகவரியில் தனது பெயரை சேர்க்க டிராவிட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பெயரை சேர்க்குமாறு வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் பல முறை அவரது வீட்டுக்குச் சென்றும் அவர் உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai