2ம் கட்ட தேர்தல்: முக்கியக் கட்சி வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரம்!

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை மற்றும் 18 பேரவைத் தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
2ம் கட்ட தேர்தல்: முக்கியக் கட்சி வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரம்!


தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை மற்றும் 18 பேரவைத் தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதோடு சேர்த்து அஸ்ஸாம், பிகார், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் மக்களவைத்  தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதி உட்பட 97 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் முக்கியக் கட்சிகளின் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் விவரத்தை கணக்கிட்டதில்,

திமுக - 46% (குற்றப்பின்னணி), 29% (கடும் குற்றப்பின்னணி) கொண்ட வேட்பாளர்கள்
காங்கிரஸ் - 43% (குற்றப்பின்னணி), 32% (கடும் குற்றப்பின்னணி) கொண்ட வேட்பாளர்கள்
பாஜக - 31% (குற்றப்பின்னணி), 20% (கடும் குற்றப்பின்னணி) கொண்ட வேட்பாளர்கள்
பகுஜன் சமாஜ் கட்சி - 20% (குற்றப்பின்னணி), 13% (கடும் குற்றப்பின்னணி) கொண்ட வேட்பாளர்கள்
அதிமுக - 14% (குற்றப்பின்னணி), 14% (கடும் குற்றப்பின்னணி) கொண்ட வேட்பாளர்களாக உள்ளனர்.

பதிவு பெற்ற கட்சிகளில், குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களை அதிகம் கொண்ட கட்சியாக திமுக இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com