சுடச்சுட

  

  டிக் டாக் செயலிக்கு விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

  By DIN  |   Published on : 15th April 2019 12:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SUPREMEcourtcut

   

  புது தில்லி: இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் அதிகம் பயன்பாட்டில் உள்ள டிக் டாக் செயலிக்குத் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

  டிக் டாக் செயலிக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்திய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளது.

  டிக் டாக் செயலியினால், இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும் எழுந்த புகாரை அடுத்து, அந்தச் செயலிக்குத் தடை விதிக்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடந்த 3-ஆம் தேதி உத்தரவிட்டது.

  இதை எதிர்த்து, அந்தச் செயலியை உருவாக்கி, அறிமுகப்படுத்திய சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், டிக் டாக் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

  இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

  இந்த மனுவைத் திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. 

  இந்நிலையில், இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தடையை நீக்க மறுத்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai