சுடச்சுட

  
  susma-swaraj

  சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆஸாம் கான், பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதாவுக்கு எதிராக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
   மகாபாரதத்தில், திரெüபதி உதவி கேட்டபோது அமைதியாக இருந்த "பிதாமகன் பீஷ்மரை' போல, அக்கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் கண்டனம் தெரிவிக்காமல் மெüனம் காப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
   உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா குறித்து, ஆஸம் கான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதுதொடர்பான, விடியோ பதிவு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
   இதுகுறித்து தனது சுட்டுரை வலைப்பக்கத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது: சகோதரர் முலாயம், நீங்கள் தான் சமாஜ்வாதி கட்சியின் குடும்பத் தலைவர்; ராம்பூர் தொகுதியில், தங்கள் முன்னிலையில், திரெüபதியைபோல ஜெயப்ரதாவை களங்கப்படுத்தியுள்ளனர். தாங்கள் பீஷ்மரைப்போல மெüனம் சாதிப்பது ஏன்?
   இந்த விமர்சனத்தை முன் வைத்து ஆஸம் கான் பேசும்போது, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி டிம்பிள் யாதவ் மற்றும் திரை உலக நட்சத்திரம் ஜெயா பச்சன் ஆகியோரும் உடன் இருந்தனர் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai