சுடச்சுட

    

    இந்திய மாணவர்களுக்கு நாசா விருது

    By  புது தில்லி / வாஷிங்டன்,  |   Published on : 16th April 2019 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில், இந்தியாவைச் சேர்ந்த 3 மாணவர்கள் குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
     விண்வெளிக்கு செல்வதற்கான திட்டங்கள், அதற்கான சோதனைகள், சந்திரனுக்கு செல்லும் சோதனைகள் உள்ளிட்ட துறைகளில் நாசா விண்வெளி மையம் ஆண்டுதோறும் போட்டிகளை நடத்தி வருகிறது.
     இந்த ஆண்டுக்கான போட்டி அமெரிக்காவில் உள்ள விண்வெளி மற்றும் ராக்கெட் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியா, வங்கதேசம், பிரேசில், ஜெர்மனி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 100 குழுக்கள் பங்கேற்றன.
     விண்வெளி ஆராய்ச்சி குறித்த தங்களது படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். உயர்நிலைப்பள்ளிகள் பிரிவில், ஜெர்மனியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி கல்வி நிறுவனத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பிரிவில், காமன்வெல்த் பகுதிகளில் ஒன்றான பியூர்டோ ரிகோ பல்கலைக்கழகத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
     சிறந்த கட்டமைப்புக்கான பிரிவில், உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் உள்ள கல்வி குழுமத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவுக்கு "நீல் ஆம்ஸ்ட்ராங்க் சிறந்த டிசைன்' விருது வழங்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் தடைகளை தகர்த்தெறிந்த பிரிவில், மும்பையில் உள்ள முகேஷ் படேல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவுக்கு "பிராங்க் ஜோ செக்ஸ்டான் நினைவு விருது' வழங்கப்பட்டது.
     ராக்கெட் மற்றும் விண்வெளி குறித்த தகவல்களை தெளிவாக எடுத்துரைத்ததற்காக, பஞ்சாபில் உள்ள லவ்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழுவுக்கு "ஸ்டெம் என்கேஜ்மென்ட் விருது' வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான நிகழ்ச்சியில், இந்திய-அமெரிக்க விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai